Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 8, 2016

செல்லப்பிராணிகளின் சிகை அலங்காரம்


டோனி, நெய்மர் என நட்சத்திரங்களின் ஸ்டைலில் சிகை அலங்காரங்களை அமைத்து கொண்டு சுற்றி வரும் ரசிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஸ்டைல் ஜுரம் செல்லப்பிராணிகளுக்கு தொற்றிக்கொண்டது என்றால் நம்புவீர்களா..?

ஸ்டைல் என்ற பெயரில் விதவிதமான சிகை அலங்காரங்களை சுமந்திருக்கும் மனித தலைகளை திரும்பும் திசையெங்கும் காணலாம். ஆனால் இதெல்லாம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்பதை நாய்களின் வழியே நாசூக்காக உணர்த்தியிருக்கிறார் ‘லீ மெய்சென்’.



தைவானில் இவர் ஆரம்பித்திருக்கும் ‘பெட் சலூன்’, பொசுபொசுவென்று முடியோடு சுற்றிவந்த செல்ல நாய்களை, கண்கவர் ஓவியங்களை மேனியில் தாங்கியபடி சுற்றித்திரிய வைத்திருக்கின்றன. முதலில் நாய்களுக்கான சிறிய பராமரிப்பு நிலையத்தை தொடங்கிய மெய்சென்னிற்கு, பிற்காலத்தில் உதிர்த்த கலைநய யோசனையின் விளைவு, இப்போது நாய்களின் மேனியில் ஓவியமாக மாறியிருக்கிறது. நாய் பிரியர்கள் பலரும் இதனைக் கண்டுவியந்தபடியும், ரசித்தபடியும் தங்களின் நாய்களுக்கும் இதுபோன்ற சிகை அலங்காரங்களை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.