ரெயில் நிலையத்தில் சுவாதி படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, சென்டிரல் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இயங்காத 20 கேமராக்களை உடனே அகற்றினார்கள்.
கண்காணிப்பு கேமராக்கள்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் (ஜூன்) 24–ந்தேதி நடைபெற்ற கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை சம்பவம் தமிழக முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருந்தாலும் கொலையாளியை உடனடியாக பிடிப்பதற்கு எந்த துருப்பு சீட்டும் கிடைக்கவில்லை.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இருந்திருந்தால் குற்றவாளியை பிடிப்பதற்கு எளிதாக இருந்திருக்கும் என்று பலர் கருத்தாக தெரிவித்தனர். இந்த நிலையில், சுவாதி படுகொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் ரெயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, நிர்பயா நிதியின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு ரெயில் நிலையங்களில் பொருத்தும் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்று அதிகாரிகளும் தெரிவித்து இருந்தனர்.
சென்டிரல், மூர்மார்க்கெட்...
பயணிகள் அதிகம் கூடும் பகுதியான சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த கேமராக்கள் அனைத்தும் பெயரளவுக்கே இயங்கி வந்தன. இந்த நிலையில், சென்னை சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் செயல்படாத கேமராக்கள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–
ஒரு குற்றச்சம்பவம் நடைபெற்றால் அதில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை உடனடியாக கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சென்னை சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் 100–க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு இருந்தன.
சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களுக்கு மேலாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமலே இருந்து வந்தன. இந்த நிலையில் சுவாதி படுகொலை சம்பவத்துக்கு பிறகு, தற்போது தூசி தட்டி பராமரிக்க தொடங்கி இருக்கின்றனர்.
பணிகளை விரைந்து முடிக்க முடிவு
சென்டிரல் ரெயில் நிலையத்தில் மட்டும் செயல்படாத நிலையில் இருந்த 20 கண்காணிப்பு கேமராக்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அகற்றி, அதை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.
அந்த இடங்களில் புதிய கேமராக்கள் அமைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் சுழலும், சுழலாத 2 வகையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதில், தற்போது சுழலும் கேமராக்கள் தான் அதிகளவில் செயல்படாமல் இருக்கின்றன. அவற்றை தான் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஏராளமான கேமராக்கள் செயல்படாமல் தான் இருக்கின்றன. அவற்றையும் விரைவில் ஆய்வு செய்து அகற்ற இருக்கிறார்கள். அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.