Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை சந்திக்கிறீர்கள்? ஸ்மிரிதி இரானி பதில்



பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை நேற்று அதிரடியாக மாற்றி அமைத்தார். ராஜாங்க மந்திரியாக இருந்த பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினட் மந்திரி பதவி கொடுத்தார். புதிதாக 19 மந்திரிகளை நியமித்தார். அதிரடியாக 5 மந்திரிகளின் பதவியையும் பறித்தார்.

இதில் முக்கிய நிகழ்வாக சர்ச்சைக்குரிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, அதிமுக்கியத்துவம் இல்லாத ஜவுளி இலாகாவுக்கு மாற்றப்பட்டார். மாற்றத்தில் ஸ்மிரிதி இரானி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஜவுளித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிற, கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிற ஜவுளித்துறை பொறுப்பை அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

ஜவுளித்துறை, பிரதமரின் மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தில் முக்கிய பங்காற்ற முடியும், இளைஞர்களை இந்த துறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். புதிய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு ஸ்மிரிதி இரானி தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜவுளித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டதும் அதிக மீடியாக்கள் அமைச்சகம் சென்றது. அப்போது ஸ்மிரிதி பேசுகையில், “நீங்கள் அனைவரும் ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு வந்து உள்ளீர்கள், இதுபோன்று அதிகளவில் ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு மீடியாக்கள் வருவது இதுவே முதல்முறையாக இருக்க சாத்தியமாக இருக்கலாம். இதனுடைய பொருள் நான் எங்கு செல்கின்றேன் என்பது எல்லாம் இல்லை, மீடியாக்கள் உடனான என்னுடைய தொடர்பு தொடரும் என்பதை காட்டுகிறது,” என்று சிரித்து கொண்டே பேசினார்.

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிரடியாக பதிலடி கொடுக்கும் ஸ்மிரிதியை அங்கு களம் இறக்கி பிறகட்சிகளுக்கு சவால் கொடுக்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்மிரிதியிடம் நீங்கள் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “பேசுவது தங்களுடைய வேலை என்று நினைக்கும் மக்கள் எதையாவது பேசதான் செய்வார்கள்,” என்று கூறிவிட்டார்.

ஸ்மிரிதி அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருந்த ஸ்மிரிதி இரானி, ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரங்களில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாகினார். இதுதொடர்பாகவே ஸ்மிரிதியை அரசு மாற்றியிருக்கலாம் அல்லது உ.பி. சட்டசபை தேர்தலை சுதந்திரமான முறையில் அவர் எதிர்க்கொள்ள வழிவகை செய்து இருக்கலாம் என்றும் யூகங்கள் எழுந்து உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.