ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்தார்.
சுவாதி கொலையாளி ராம்குமார் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ராம்குமார் உடல்நிலையை இன்று காலை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை.
நெல்லையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது திரவ உணவு அளித்துள்ளனர். ஆனால் இன்று திட உணவு கொடுக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று காலை ராம்குமாருக்கு இட்லி மற்றும் இடியாப்பம் வழங்கப்பட்டது.
ராம்குமார் இப்போது நன்றாக பேசுகிறார். அவர் குரலில் வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கழுத்தில் பிளேடால் ஆழமாக வெட்டி உள்ளதால் 18 தையல் போட்டுள்ளனர்.
அந்த தையல் போட்ட பகுதியில் ரத்த கசிவு எதுவும் இல்லை. அந்த காயம் மிகவும் வேகமாக ஆறி வருகிறது.
தையலை எப்போது பிரிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும்.
தொடர்ந்து அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.
இவ்வாறு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.