ரசிகர்களை கிறுக்கர்களாக்கும் போக்கிமோன் கோ வீடியோ கேம்ஸ் ஜப்பானில் வெளியானது.
இல்லாத கதாபாத்திரங்களை இருப்பதுபோல் மாயமாக சித்தரித்து, செல்போன் மூலம் தேட வைக்கும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் ஆப்ஸ் இன்று ஜப்பானில் வெளியானது. வெளியான சிறிது நேரத்தில் இந்த ஆப்ஸ்-க்கு ஜப்பானியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.
ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் இந்த ரியாலிட்டி கேமை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும்.
விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமோன் கோ.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்களில் கிடைக்கும் ’போக்கிமோன் கோ’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் இன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகமான சில மணிநேரங்களில் விற்பனையில் சாதனை படைத்ததுடன், இந்த விளையாட்டை கண்டுபிடித்த நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பங்குகள் இன்று ஜப்பானிய பங்கு சந்தையில் கடும் உயர்வை எட்டியுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.