Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 28, 2016

விமானம் மாயமான விவகாரம்: கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆரஞ்சு வண்ண சிலிண்டர்கள் விமான பாகங்களா?


கடலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆரஞ்சு வண்ண சிலிண்டர்கள், மாயமான விமானத்தின் பாகங்களா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிர தேடுதல் 

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படை விமான நிலையத்தில் இருந்து 22–ந் தேதி அந்தமானை நோக்கி புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென்று மாயமானது.

விமானம் கடலில் விழுந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதி, விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவை கடல் மட்டத்தில் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

2 ஆரஞ்சு உருளைகள் 

ஆனால் கடந்த 4 நாட்களாக கடல் மட்டத்தில் விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடல் மட்டத்தில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து பார்த்ததில் அவை, மீன்பிடி படகுகள் சம்பந்தப்பட்டவை என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் சென்னைக்கு கிழக்கே 145 கடல் மைல் தூரத்தில் ஆரஞ்சு நிறத்தில் உருளை போன்ற 2 பொருட்கள் தென்படுவதாக கடலோர காவல் படையின் விமானி ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததாக செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுபற்றிய ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆனாலும் அவை விமானத்தின் பாகங்கள்தானா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் கூறப்படவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.