Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்: பீட்டர் முகர்ஜி மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு


பிரபல தனியார் டி.வி. சேனல் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை 2–வது கணவருடன் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கண்ணா, முன்னாள் கார் டிரைவர் மற்றும் அவரது தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பீட்டர் முகர்ஜி குறித்து அவரது முன்னாள் மனைவி சப்னம் சிங்கிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:–

பீட்டர் முகர்ஜி ஒழுக்கம் இல்லாதவர். அவர் எப்போதும் இளம்பெண்கள் கூட்டம் தன்னை சுற்றி இருக்க வேண்டும் என விரும்புவார். நள்ளிரவு நேர விடுதிகளில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.அவரது வாழ்க்கையில் நிறைய பெண்கள் இருந்தனர். எனவே தான் அவருடனான மண வாழ்க்கையை முறித்து கொண்டேன்.

நாங்கள் விவாகரத்து பெற்ற பிறகு அவர் எனக்கு இந்திராணியை லண்டனில் வைத்து அறிமுகம் செய்தார். அப்போது நான் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து, ‘நீ இனிமேல் ஒரு காலமும் திருந்தமாட்டாய்’ என ஏளனமாக கூறினேன். பிற பெண்களை போல இந்திராணியையும் தூக்கி எறிந்துவிடுவார் என நினைத்தேன். ஆனால் அவர் இந்திராணியை திருமணம் செய்து கொண்டதாக பின்னாளில் தெரிந்து கொண்டேன்.இவ்வாறு பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி தனது ரகசிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலம் வழக்கு விசாரணைக்கு தேவையற்றது எனவும், பீட்டர் முகர்ஜியின் நற்பெயரை களங்கப்படுத்த சித்தரிக்கப்பட்டவை என பீட்டர் முகர்ஜியின் வக்கீல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.