Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறைக்கு 50 புதிய நாற்காலிகள் ‘நமக்கு நாமே’ பாணியில் தி.மு.க. போட்டுக்கொண்டது


தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறைக்கு 50 புதிய நாற்காலிகளை தி.மு.க. தனது சொந்த செலவில் போட்டுள்ளது.

தி.மு.க. கோரிக்கை
கடந்த சட்டசபை தேர்தலில் 89 தொகுதிகளை வென்ற தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

இந்த நிலையில் சட்டசபை அமைந்துள்ள தலைமைச் செயலகத்தின் 4–வது வாயில் அருகே எதிர்க்கட்சி தலைவருக்கான அறையை சபாநாயகர் ப.தனபால் ஒதுக்கினார். ஆனால், அந்த அறையில் 89 எம்.எல்.ஏக்களும் அமரக்கூடிய வசதி இல்லை என்றும், அருகில் உள்ள அறையையும் சேர்த்துத்தர வேண்டும் என்றும் தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

புதிய 50 நாற்காலிகள்
இந்த நிலையில், அரசு விடுமுறை நாளான நேற்று பிற்பகலில் மினிவேனில் 50 பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் அறையில் இருந்த சிறிய பிளாஸ்டிக் நாற்காலிகளை வெளியே வைத்துவிட்டு, புதிதாக கொண்டு வந்த நாற்காலிகளை உள்ளே கொண்டு சென்று அடுக்கினர்.

அங்கு ஏற்கனவே இருந்த சோபா இருக்கைகளையும் அறைக்கு வெளியே வைத்துவிட்டனர். பின்னர் சிறிய பிளாஸ்டிக் நாற்காலிகளையும் உள்ளே கொண்டு சென்றனர்.

‘நமக்கு நாமே’ பாணியில் தி.மு.க. மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.

விதிகளுக்கு முரணானது
இதுகுறித்து சட்டசபை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–

சபாநாயகர் உத்தரவுப்படி அந்த அறை ஒதுக்கித்தரப்பட்டுள்ளது. அவர்கள் அதில் ஸ்கிரீன் போட்டு ஒரு பகுதியை பிரித்து வைத்துள்ளனர். தற்போது புதிய நாற்காலிகளை அவர்களாகவே உள்ளே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சியும் இப்படி நடந்து கொண்டதாக தெரியவில்லை.

இதற்கு சபாநாயகரின் உத்தரவை எழுத்து மூலம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தரப்பில் அவர்கள் எந்த உத்தரவையும் பெறவில்லை. விடுமுறை நாளில் திடீரென்று, அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரசு சொத்துகளை வெளியேற்றிவிட்டு, அவர்களின் சொத்துகளை அந்த இடத்தில் வைப்பது விதிகளுக்கு முரணானது.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.