வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதிக்காக எனது இதயம் கசிந்து உருகுகிறது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கவலை தெரிவித்துள்ளார்.
நிகரில்லா தலைவர் மாயாவதி
இதுதொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லா தலைவராக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாயாவதி ஆவார்.
சமீபத்தில் குஜராத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து இவர் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதன் காரணமாகவோ, என்னவோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவராக உள்ள தயாசங்கர் சிங் மிகவும் மோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் மாயாவதியைப் பற்றி விமர்சித்துள்ளார்.
வார்த்தை சவுக்கடி
அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதுவும் தயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். அவர் சார்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் இழுக்கை தேடித்தருவதாகவே இது உள்ளது.
அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது அரசியல் வாழ்வில் இது போன்ற துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதியின்பால் எனது இதயம் கசிந்து உருகுகிறது.
பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்கள் இத்துடனாவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
பா.ஜ.க. தலைவருக்கு கோரிக்கை
தயாசங்கர் சிங்கின் விமர்சனத்திற்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்திருப்பதும், பாரதீய ஜனதா கட்சி தயாசங்கர் சிங்கை உத்தரப்பிரதேச மாநில கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளதும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கை போதுமானதல்ல.
பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங் பாரதீய ஜனதா கட்சியில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தலைவரை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.