அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்கும் ஒபாமாவின் மூத்த மகளான மாலியாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உலகம் முழுவதும் மிகவும் ஒரு பிரபலமான பாடலின் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 1776-ம் ஆண்டு விடுதலை பெற்ற அமெரிக்காவின் சுதந்திர தினம் கடந்த 4-ம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுதந்திர நாடாக அமெரிக்கா பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக கையில் மைக்கை பிடித்து தாய்நாட்டை வாழ்த்தி அதிபர் ஒபாமா ‘ஹாப்பி பர்த்டே’ பாட்டைப் பாடினார்.
பின்னர், அதேநாளில் பிறந்த தனது மூத்த மகள் மாலியாவின் பிறந்தநாளுக்காக மகளை அருகில் அழைத்து மீண்டும் ஒருமுறை அவர் ‘ஹாப்பி பர்த்டே’ பாடும் காட்சியும், தனது பிறந்தநாளை அரசு விழாவைப்போல் சிறப்பித்த தந்தை ஒபாமாவின் அன்பில் நெகிழ்ந்துப்போன மாலியா அவரது தோளில் சாய்ந்தபடி பெருமிதத்துடன் சிரிக்கும் காட்சியும் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.
(வெள்ளை மாளிகையில் மாலியா ஒபாமாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுவது இதுவே கடைசிமுறை என்பது குறிப்பிடத்தக்கது)
அந்த வீடியோவைக் காண..,

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.