ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பயணி தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
பிர்ஜு சல்லா(35) என்ற தொழில் அதிபர் நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் உயர்வகுப்பில் மும்பையில் இருந்து ராஜ்கோட் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. காலை உணவுடன் வழங்கப்பட்ட சன்னா மசாலாவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. ஆனால் கரப்பான் பூச்சி இருந்தது தெரியாமல் அந்த உணவை சாப்பிட்டதால் அவருக்கு விமானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் விமான பணியாளர்களிடம் கூறிய போது அவர்கள், மற்றொரு பிளேட் உணவு வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால், பிர்ஜு சல்லாவுக்கு எந்த மருத்துவ உதவியும் அளிக்கவில்லை.
இது குறித்து இமெயில் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திகு அவர் புகார் அளித்துள்ளார். பிர்ஜு சல்லாவின் புகார் பற்றி விளக்கம் அளித்துள்ள ஜெட் ஏர்வேஸ் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.