சென்னை:
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, மாதாந்திர ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கிவைக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்- அமைச்சர் பொறுப்பை தான் கவனிக்க வேண்டியிருந்ததால், தனது தொகுதி (ஆர்.கே. நகர்) மக்களிடம் குறைகளை கேட்டு பெறுவதற்காக, முதல்-அமைச்சர் தனி பிரிவு சிறப்பு அதிகாரி கணேஷ் கண்ணாவை அவர் நியமித்தார்.
இவர் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த மனுக்கள் உடனடியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் பெரும்பாலானவை, ஓய்வூதிய தொகை கேட்டும், பட்டா கேட்டும் வரப்பெற்றவை ஆகும். எனவே அது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கிவைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.