Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

டெல்லியை சேர்ந்த மாடல் அழகியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது


டெல்லியை சேர்ந்த மாடல் அழகியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.

மாடல் அழகி தற்கொலை
டெல்லியை சேர்ந்த மாடல் அழகி கரம்ஜீத் கவுர்(வயது25). இவர் மும்பை அந்தேரி நான்கு பங்களா, சஞ்சீவன் கட்டிடத்தில் தனது ஆண் நண்பர் ஜித்தேந்திர சிங்(27) என்பவரின் வீட்டில் தூக்குபோட்டு 2 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், நட்புடன் பழகி வந்த ஜித்தேந்திர சிங்கும், கரம்ஜீத் கவுரும் பின்னர் காதலித்து வந்தது தெரியவந்தது.

காதலர் கைது
ரம்ஜான் பண்டிகையையொட்டி மும்பை வந்த மாடல் அழகி கரம்ஜீத் கவுர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜித்தேந்திர சிங்கிடம் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு ஜித்தேந்திர சிங் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் கரம்ஜீத் கவுர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் தனது மகள் கரம்ஜீத் கவுரை, ஜித்தேந்திர சிங் தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஜித்தேந்திர சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.