Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் இவரை கண்டால் பாம்பு படையும் நடுங்குகிறது:இங்கிலாந்தில் ஒரு அதிசய மனிதர்


100க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் கடித்தும் நீண்ட நாள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த டிம் பிரெய்டு என்பவர் ஆவார்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் இவரை கண்டால் பாம்பு படையும் இவரை கண்டு நடுங்குகிறது அந்த வகையில் இவரது உடல் பலம் பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் டிம் பிரெய்டு (வயது 37) இவரது உடலில் எந்த விஷ பாம்பும் கடித்தாலும் அவருக்கு விஷம் ஏறுவதில்லை. காரணம் அவர் தனது உடலில் விஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி உள்ளார். இவர் 20 வயதில் திருமணம் செய்து கொண்டார்.  37 வயதாகும் டிம் பிரெய்டு கடந்த 16 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை கடிக்க விட்டுள்ளார். மேலும் விஷ ஊசிகளும் பயன்படுத்தி உள்ளார். இதனால் மரணம் கூட இவரை பார்த்து பயப்படுகிறது. இவரது உடலை கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். மேலும் அவரது உடல் முழுவதும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் உலகில் உள்ள கொடிய விஷங்களை கொண்ட பாம்புகளை கொண்டு என்னை கடிக்க விடுங்கள் ஒரு கை பார்க்கிறேன் என்று அரைகூவல் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.