Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து


துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

துபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள 35-வது தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் மேல் தளங்களுக்கும் மளமளவென தீ பரவியது. ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகளும் கடும் புகையும் வெளியேறியது. எரிந்துபோன கட்டிடத்தின் பாகங்கள் தரையில் வந்து விழுந்தன. இதனால் அப்பகுதியை நெருங்கவே பொதுமக்கள் அஞ்சினர்.

குடியிருப்பில் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக கீழ் தளங்களுக்கு விரைந்தனர். லிப்ட் மூலம் வருவதற்கு தாமதம் ஆகும் என்பவதால், சிலர் மாடிப்படிகளில் ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக செய்தி வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு, உலகின் 127-வது உயரமான கட்டிடம் ஆகும். துபாயின் 23-வது உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.