அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்ல இருந்த சீல் வைக்கப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் சிக்கி கொண்ட 20 வயது வாலிபர் ஒருவர் 8 மணிநேரம் கழித்து சுங்க அதிகாரிகளால் வெளியே கொண்டு வரப்பட்டார்.
மும்பையின் மீரா சாலை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கண்டெய்னர் ஒன்றில் பெண்களுக்கான காலணிகள் ஏற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அது மும்பையில் இருந்து கப்பல் வழியே நியூயார்க் நகருக்கு கொண்டு செல்வதற்காக தயாரானது.
அதன்பின் நேற்று காலை 10 மணியளவில் நவ சேவா துறைமுகத்திற்கு கண்டெய்னர் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுங்க அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர். உள்ளே இருந்து அலறல் சத்தத்தினை கேட்ட அதிகாரிகள் கண்டெய்னரின் சீலை திறந்தனர்.
அதன் உள்ளே பரூக் அகமது என்ற தொழிலாளி இருந்துள்ளார். அவரை வெளியே கொண்டு வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டெய்னரில் சரக்கினை ஏற்றும்பொழுது, அந்த வாலிபர் உள்ளே படுத்து தூங்கியுள்ளார். அவர் 8 மணிநேரம் தொடர்ந்து உள்ளே இருந்துள்ளார். இதில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் நடைபெறவில்லை.
அதன்பின்னர் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு (சுங்க அதிகாரிகள், வாலிபர் மற்றும் நிறுவன அதிகாரிகள்) தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என போலீசார் ருக்மணி கலாண்டே கூறினார். கண்டெய்னரின் சீலை சுங்க அதிகாரிகள் திறக்கவில்லை எனில் வாலிபர் மூச்சு திணறி உள்ளேயே இறந்திருக்க கூடும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.