ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் தள்ளுபடி செய்து உள்ளது.
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையை முனுசாமி என்ற முதியவர் கடந்த 2–ந் தேதி அதிகாலையில் கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை குடிபோதையில் வேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக சேத்துப்பட்டையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா வில்டன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், ஜாமீன் கேட்டு ஐஸ்வர்யா வில்டன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘இந்த விபத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குடிபோதையில் காரை ஓட்டவில்லை. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக்கியதால், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் கணித பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றவள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்யும் விதமாக அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கவேண்டும்’ என்றார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை 13–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 14-ம் தேதி மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மீண்டும் தள்ளுபடி
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஐஸ்வர்யா மனுதாக்கல் செய்தார். ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் தள்ளுபடி செய்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.