Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாடு: உரிமையாளர் விற்க மறுப்பு


மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயியான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார்.

இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லிட்டரில் இருந்து 31 லிட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது.

முன்னாசிங் இந்த மாட்டை வாங்கி வந்ததற்கு பிறகு அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு அவருடைய மாட்டு பண்ணை அசுர வளர்ச்சி அடைந்தது.

இதனால் ஹீரா எருமை மாட்டை அதிர்ஷ்டகர மாடாக கருதுகின்றனர். எனவே பலரும் இதை வாங்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் முன்னாசிங் இதுவரை விற்க முன்வரவில்லை.

இந்த நிலையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ஹர்சவர்த்தன் சிங் என்ற வியாபாரி அவரிடம் சென்று மாட்டை விலைக்கு கேட்டார். ரூ.4 கோடி வரை அவர் விலை பேசினார். ஆனால் முன்னாசிங் மாட்டை கொடுக்க மறுத்து விட்டார்.

இந்த மாட்டால் தான் எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. எனவே அதை விற்க மனம் இல்லை என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.