Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2016

ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏ. மகன் ஓட்டிச்சென்ற கார் மோதி 3 பேர் சாவு 2 போலீசார் படுகாயம்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜன்பத் மார்க் பகுதியை நோக்கி பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது.

அந்த கார் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீசாரின் வேன் மீதும் பலமாக மோதியது.

இந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 2 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மான்சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த காரை ஓட்டி வந்தது சிகார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் மகரியாவின் மகனான சித்தார்த் மகரியா என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சித்தார்த் மகரியாவும், அவருடன் காரில் வந்த நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.