ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
ஓசூர் அருகே உள்ள புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 19). ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3–ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வினய்குமார் (20). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சந்திராவும், வினய்குமாரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கு இடையே காதல் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த சந்திராவின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலன் மீது தாக்குதல்
மேலும் சந்திராவின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். இதையறிந்த வினய்குமார் நேற்று முன்தினம் தன் பெற்றோருடன் சந்திராவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சந்திராவின் உறவினர்கள், வினய்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் சந்திராவிற்கு வினய்குமார் செல்போனில் எஸ்.எம்.எஸ் (குறுந்தகவல்) அனுப்பினார். அதில், ‘நாம் எங்காவது ஓடி போய் திருமணம் செய்து கொள்வோம். நீ இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.
தற்கொலை
இந்நிலையில் நேற்று அதிகாலை சந்திரா தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சந்திராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலன் வினய்குமாரை கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.