Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

சமையல் எரிவாயு விலை ரூ.1.98 உயர்வு மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ.11 குறைப்பு


மானிய சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.1.98 உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் மானியமற்ற சிலிண்டருக்கு ரூ.11 குறைக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
சர்வதேச சந்தையின் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 89 காசுகளும், டீசல் 49 காசுகளும் குறைக்கப்பட்டு உள்ளன.

இந்த விலை குறைப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து உள்ளன.

அமலுக்கு வந்தது
இதில் வீடுகளில் உபயோகிக்கப்படும் மானியமுள்ள சிலிண்டருக்கு ரூ.1.98 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய விலையின்படி சென்னையில் 14.2 கிலோ இண்டேன் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.408.66 ஆக உயர்ந்துள்ளது. இதுவே டெல்லியில் ரூ.421.16 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.423.16 ஆகவும், மும்பையில் ரூ.446.89 ஆகவும் அதிகரித்து உள்ளது.

ஆனால் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.11 குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இண்டேன் நிறுவனத்தின் 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.550.50 ஆகவும், டெல்லி மற்றும் மும்பையில் ரூ.537.50 ஆகவும் குறைந்து உள்ளது.

இந்த எரிவாயு விலை மாற்றமும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.