Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன் உதாரணமாக திகழும் எல்.ஐ.சி. ஊழியர்


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). எம்.பி.ஏ. படித்துள்ள அவர் கிருஷ்ணகிரியில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயது இருக்கும்போது போலியோ நோய் தாக்கியது. இதனால் அவரது கால்கள் செயல் இழந்தது.

கால்களால் ஊனமுற்றாலும் ஊனத்தை ஒரு பொருட்டாக கருதாமல் அவர் சாதிக்க நினைத்தார். ஓட்டுனர் உரிமம் பெற்ற அவர், தன்னை போல் மாற்றுத்திறனாளிகள் ஓட்டக்கூடிய வகையில் ஒரு காரை பிரத்யேகமாக வடிவமைத்தார். கால்களால் இயக்கப்படும் பிரேக், கிளர்ச் மற்றும் ஆக்சிலேட்டர் ஆகியவற்றை கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் ரவி ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக தமிழகத்தில் தற்போது சுமார் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி ரவி கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளிடத்தில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் கடந்த 17-2-2016 அன்று கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு காரில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன். என்னுடைய பயணத்தின் பயனாக சுங்கச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட வரியில் விலக்கு அளிக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இருந்து டெல்லிக்கு கார் ஓட்டிச்சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.