Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் ஏரியில் குதித்து தற்கொலை


துமகூரு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அதன் தாயும் ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பேகூரில் வசித்து வருபவர் நாகராஜ், விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 23). இவர்களுக்கு 4 வயதில் பவ்யாஸ்ரீ, 2 வயதில் ஹேமாஸ்ரீ என்ற பெண் குழந்தைகள் இருந்தது. நாகராஜிக்கும், மஞசுளாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று காலையில் தனது குழந்தைகள் 2 பேரையும் தொட்டகெரே ஏரிக்கு மஞ்சுளா அழைத்து சென்றார். பின்னர் குழந்தைகள் பவ்யாஸ்ரீ, ஹேமாஸ்ரீயை ஏரியில் தள்ளி மஞ்சுளா கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, மஞ்சுளாவும் ஏரியில் குதித்து தற்கொலை செய்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கணவருடன் தகராறு

இதுபற்றி அவர்கள் உடனடியாக குனிகல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே குனிகல் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் ஏரியில் இருந்து தாய் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கணவர் நாகராஜுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளையும் ஏரியில் தள்ளி கொன்று விட்டு மஞ்சுளாவும் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.