சேலத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க.வுடன் இணைப்பு விழா
கடந்த சட்டசபை தேர்தலின்போது, மக்கள்நல கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி சேர வலியுறுத்தியும் அந்த கட்சியின் அப்போதைய எம்.எல். ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை மக்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்திரகுமார் தலைமையில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து இதற்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க.வுடன் மக்கள் தே.மு.தி.க. இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.எச்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
25 ஆயிரம் பேர் இணைந்தனர்
விழாவில் வி.சி.சந்திரகுமார் பேசும்போது, ‘தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் இன்றைய தினம் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தே.மு. தி.க.வில் உள்ளவர்களை தி.மு.க.விற்கு அழைப்பது எனது உரிமை’ என்று குறிப்பிட்டார். இதில் தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தி.மு.க.வில் இணைந்த மக்கள் தே.மு.தி.க.வினரை வரவேற்று பேசினார்.
முன்னதாக மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.எச்.சேகர், சம்பத்குமார் மற்றும் வேலூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் விஸ்வநாதன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில பஞ்சாலை பிரிவு துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை பொதுச்செயலாளர் தேனி முருகேசன் உள்பட சேலம், ஈரோடு, கோவை, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் புதிதாக இணைந்த நிர்வாகிகள், தொண்டர்களை மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
உறுப்பினர் படிவம்
25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்து கொண்டதற்கான உறுப்பினர் படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வழங்கினார்கள். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.