சுவர் ஏறி குதித்து மும்பை விமான நிலையத்திற்குள் புகுந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவர் ஏறி குதித்த ஆசாமி
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் உள்நாட்டு விமான நிலையத்தின் 8-ம் எண் கேட் பகுதியில் ஆசாமி ஒருவர் வேலி இல்லாமல் 5 அடி உயரமே உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி, விமான நிலையத்திற்குள் குதித்து உள்ளே நுழைந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சுனில் குமார் இதை கவனித்தார். உடனே அவர் அந்த நபரை மடக்கிப் பிடித்தார்.
வழக்குப்பதிவு
இதுபற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் அந்த ஆசாமி வகோலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்திய போது, விமான நிலையம் என்று தெரியாமல் தவறுதலாக சுவர் ஏறி குதித்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்திற்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.