Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2016

சென்னை நீதிமன்றத்தில் ராம் குமாரை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு


சுவாதி கொலையாளி ராம் குமாரை நாளை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.

பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில், கொலையாளி ராம்குமார் செங்கோட்டை பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சித்தார். இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளி ராம்குமார் கைதானது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமார் வருவாய், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அப்போது பேஸ்புக் மூலம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், சுவாதி தன்னை தவறாக பேசியதால் கொலை செய்ததாகவும் ராம்குமார் வாக்குமூலம் அளித்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று( ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை ராம்குமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ வசதிகளுடன் சென்னைக்கு அழைத்துவர வாய்ப்பு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பிடிபட்ட ராம்குமாரை சென்னைக்கு கொண்டுவர 3 மருத்துவர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராம்குமார் சென்னை அழைத்துவரப்பட உள்ளார். கொலையாளி ராம்குமாரிடம் திருநெல்வேலி நீதிபதி ராமதாஸ் விசாரணை நடத்தினார். மருத்துவமனையில் ராம்குமாரிடம் விசாரணை நடத்திய நீதிபதி ராமதாஸ் கொலையாளி ராம்குமாரை நாளை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சென்னை எழும்பூர் 14-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார். ராம்குமார் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளார். ஆம்புலன்ஸில் மருத்துவர்களும் வரஉள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.