90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் உடலை அழகுபடுத்துவதற்காக சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்கும், தகவல் தொடர்புகளுக்குமே தங்கள் வருவாயில் பெரும்பகுதியை செலவழிப்பது தெரியவந்தது.
இந்திய மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை எந்தெந்த தேவைகளுக்காக செலவிடுகிறார்கள்? என்பது குறித்து மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மாதிரி சேவை நிறுவனம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆய்வு நடத்தியது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு உட்பட்ட 7,969 கிராமங்களை சேர்ந்த 47 ஆயிரத்து 535 குடும்பங்களிலும், 6,048 நகரங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 65 குடும்பங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சலூன் மற்றும் அழகு நிலைய சேவைகள், தொலைக்காட்சி, ரேடியோ சேவை, சலவை, பழுதுபார்த்தல், பராமரித்தல், தகவல் தொடர்பு, மதவழிபாடு, பொழுதுபோக்கு, கலாசார சேவைகள், வியாபாரம், பயணங்கள், தையல் என 14 சேவைகளுக்கான செலவினங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
இதில் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் உடலை அழகுபடுத்துவதற்காக சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்கும், தகவல் தொடர்புகளுக்குமே தங்கள் வருவாயில் பெரும்பகுதியை செலவழிப்பது தெரியவந்தது.
கிராமவாசிகள் தகவல் தொடர்புக்காக 25.33 சதவீதம், அழகுபடுத்துதலில் 11.07 சதவீதம், ரேடியோ, தொலைக்காட்சி சேவைக்கு 10.58 சதவீதம், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தலுக்கு 10.27 சதவீதம், தையல் பணிகளுக்கு 10.18 சதவீத வருவாயை செலவழிக்கின்றனர்.
இதைப்போல நகரவாசிகளும் தகவல் தொடர்புக்கு 26.33 சதவீதம், அழகுபடுத்துதலுக்கு 12.11 சதவீதம், ரேடியோ, தொலைக்காட்சி சேவைக்கு 10.22 சதவீதம், பொழுதுபோக்கு மற்றும் கலாசார சேவைகளுக்கு 9.95 சதவீதமும் செலவழிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.