Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

தர்ஷி ஜெயின் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை:சுஷ்மா சுவராஜ் தகவல்


வங்காளதேசத்தில் பலியான தருஷி ஜெயின் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தருஷி ஜெயின்(வயது 19). பலியானார். இவர் அமெரிக்காவின் பெர்கிலே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவி ஆவார். இவருடைய தந்தை சஞ்சீவ் ஜெயின் டாக்காவில் வசித்து வருகிறார். விடுமுறையில் தந்தையை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தருஷி ஜெயின் டாக்கா வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ‘ஹோலே ஆர்டிசன் பேக்கரி’யில் சாப்பிடுவதற்காக சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரும் சிக்கிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில் அவரது உடல் இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

தருஷி ஜெயின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவரது உடல் இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தருஷி ஜெயின் உடல் இந்தியா கொண்டு வர சில சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாளை அவரது உடல் டெல்லி கொண்டு வரப்படும். பின்னர் உத்தரபிரதேசத்தில் உள்ள பெரோஷாபாத்தில் தருஷி ஜெயின் உடல் அடக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.