Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

ராணுவ விமானம் மாயமான கடல் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிப்பு


விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் சென்னை அருகே மாயமான கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.  அதற்கான புகைப்படங்கள் செயற்கைக்கோள் வழியே கண்டறியப்பட்டுள்ளன.  இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  மிதக்கும் பொருளை கண்டறிய 2வது செயற்கைக்கோள் உதவியுடன் தேடும் பணி நாளை தொடரும் என தகவல் தெரிவிக்கின்றது.

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ராணுவ விமானம் சிறிது நேரத்திலேயே சென்னை அருகே கடல் பகுதியில் திடீரென மாயமானது. விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானத்தில் 29 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேரும், விமானப்படை ஊழியர்கள் 11 பேரும், ராணுவ வீரர்கள் 2 பேரும், கடற்படை வீரர் ஒருவரும், கப்பல் மாலுமி ஒருவரும், கப்பல் படை ஊழியர்கள் 8 பேரும் இருந்தனர்.

மாயமான அந்த விமானத்தை விமானிகள் பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குணால், விமான பொறியாளர் ராஜன் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்தனர்.

விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி தீபிகா, விமானப்படை வீரர் சஞ்சீவ்குமார் மற்றும் 9 பேர் இதில் பயணம் செய்துள்ளனர்.

ராணுவ என்ஜினீயரிங் சேவை பிரிவில் பணிபுரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த விமல் மற்றும் ஒருவர் விமானத்தில் இருந்தனர்.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள பழுதான கப்பல்களை சரிசெய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்திர சிங், மகாரானா, சின்னாராவ், சீனிவாச ராவ் ஆகிய 8 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.