சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் முதலாம் ஆண்டு அப்துல் கலாம் நினைவு அமைதி பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் விவேக் மாணவர்கள், இளைஞர்களின் ‘சூப்பர் ஸ்டார்’ அப்துல் கலாம் என்று புகழாரம் சூட்டினார்.
அமைதி நடைபயணம்
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி புவி வெப்பமயமாதல் மற்றும் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விவேக் நடத்தும் ‘கிரீன் கலாம்’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு அமைதி நடைபயணம் நடந்தது.
அமைதி நடைபயணத்தை, கண்ணகி சிலையின் பின்புறத்தில் இருந்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் அரோரா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுடன் அவர்களுடைய நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்களும் உடன் வந்திருந்தனர்.
விழிப்புணர்வு பதாகைகள்
‘மரங்கள் எங்கள் ஆதித்தாய்’, ‘மரங்களின் வெளிமூச்சு நம் உள்மூச்சு’, ‘மரங்கள் வளரட்டும் பூமி குளிரட்டும்’, ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்திருந்தனர். நடைபயணத்தை விவேக் வழிநடத்திச்சென்றார். அவருக்கு பின்னால் மாணவ-மாணவிகள் அணிவகுத்து பேரணியாக சென்றனர்.
விவேக் உடன் அவருடைய மகள் தேஜஸ்வினி, போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் அரோரா, நடிகர் செல் முருகன், திரைப்பட துறையை சேர்ந்த கலைஞர்கள் சிலரும் ராணிமேரி கல்லூரி வரையிலும் பேரணியாக சென்றனர்.
மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
அமைதி பேரணி ராணி கல்லூரியை சென்றடைந்ததும், கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்களை விவேக் வழங்கினார். இதேபோல ஆட்டோக்களில் ஒட்டுவதற்கு அப்துல் கலாம் படம்-பொன்மொழிகள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரையும் ஆட்டோ டிரைவர்களுக்கு விவேக் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராணி மேரி கல்லூரியின் முதல்வர் ராஜசுலோச்சனா, நடிகர் செல் முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாணவர்கள்-இளைஞர்களின் ‘சூப்பர் ஸ்டார்’
முன்னதாக மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்கள் மத்தியில் விவேக் பேசியதாவது:-
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னால் அது நம்முடைய அப்துல் கலாம் தான். வருங்கால தலைமுறையினர் பயன்பெறும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்று அப்துல் கலாம் எனக்கு அன்பு கட்டளை பிறப்பித்தார். அவருடைய கட்டளையை கொஞ்சம், கொஞ்சமாக நான் நிறைவேற்றி வருகிறேன். இதுவரையிலும் 27 லட்சத்து 35 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுவிட்டேன்.
அப்துல் கலாம் எனக்கு கொடுத்த ஆணையை தொடர்ந்து செய்து, நிறைவேற்றி முடிப்பேன். இதனை வெற்றிக்கரமாக செய்து முடிப்பதே, நான் அவருக்கு சமர்ப்பணம் செய்யும் அஞ்சலியாக கருதுகிறேன். ஒரு கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற திட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மூலமாக நிறைவேற்றி வருகிறோம்.
ஜெயலலிதாவுக்கு நன்றி
நிலத்தடி நீர் குறைவதற்கும், விவசாயம் அழிந்து வருவதற்கும் மழை இல்லாததே காரணம். மழை இல்லாததற்கு மரங்கள் இல்லாதது தான் காரணம். மாணவர்கள் நினைத்தால் மரங்களை நட்டு விவசாயத்தை தழைத்தோங்க செய்யமுடியும். மரங்கள் நடுவதற்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நல்ல ஒத்துழைப்பை தருகின்றன. இதேபோல பொதுமக்களும், தொழிலதிபர்களும் மரங்கள் நடுவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
அப்துல் கலாம் எனக்கு பிறப்பித்த ஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற ஆணையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறேன். அந்த இலக்கை விரைவில் எட்டிவிடுவேன். அமைதி பேரணி நடத்துவதற்கு அனுமதியளித்து ஒத்துழைப்பு தந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.