அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹாப்பேஜ் என்ற பகுதியில் மனைவி மற்றும் 11 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தவர் சந்தன் கவாய் (வயது 38). இந்தியரான இவர் அமெரிக்காவில் தங்கி வேலைபார்ப்பதற்கான ‘விசா’ பெற்று அங்கு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையை பார்ப்பதற்காக சந்தன் கவாயின் தந்தை கமல்நயன் கவாய் (74), தாய் அர்ச்சனா கவாய் (60) ஆகிய இருவரும் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு சந்தன் கவாய் தனது பெற்றோர், மனைவி மற்றும் குழந்தையுடன் தனது காரில் நிசான் அல்திமா என்ற இடத்தில் மத்திய தீவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சந்தன் கவாய் குடும்பத்தினர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கமல்நயன் கவாய், அர்ச்சனா கவாய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சந்தன் கவாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சந்தன் கவாயின் மனைவி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என கூறப்படுகிறது.
இருந்த போதிலும் இந்த விபத்தில் சந்தன் கவாயின் 11 மாத குழந்தை பெரிய அளவில் காயங்கள் எதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. லாரி டிரைவரான கஸ்டவ் கெயர் மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்து உள்ளது. அவரும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கார் விபத்தில் அப்பா மற்றும் தாத்தா, பாட்டியை இழந்ததோடு, அம்மாவும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் 11 மாத குழந்தை அனாதை ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள சம்பவம் சந்தன் கவாயின் உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.