பெங்களூரு,
கர்நாடகத்தில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒரு நாள் முன்னதாகவே நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
35 சதவீத ஊதிய உயர்வு
கர்நாடக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி போக்குவரத்து ஊழியர்களுக்கு இப்போது 8 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 35 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 25–ந் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தன.
இந்த நிலையில் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 8 சதவீத ஊதிய உயர்வை 10 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடும்படியும் ஊழியர்கள் சங்கங்களை முதல்–மந்திரி சித்தராமையா கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஊழியர் சங்கம் ஏற்க மறுத்து விட்டன.
பெங்களூருவில் பஸ்கள் ஓடவில்லை
இதனால் திட்டமிட்டப்படி 25–ந் தேதி(இன்று) போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று சங்க பிரதிநிதிகள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே நேற்று முதலே பெங்களூரு உள்பட பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மடிவாளா, எலெக்ட்ரானிக் சிட்டி, கெங்கேரி, ஒயிட்பீல்டு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று பஸ்கள் ஓடவில்லை. ராஜாஜிநகர் உள்பட ஒரு சில பகுதிகளில் பஸ்கள் ஓடின.
பயணிகள் பரிதவிப்பு
மண்டியா, மைசூரு, பெலகாவி, கதக் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று காலையில் இருந்தே பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கின. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் சுமார் 23 ஆயிரம் பஸ்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் மாநில போக்குவரத்து மந்திரி ராமலிங்க ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் அவர் கூறுகையில் ‘போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக மாநிலத்தில் உள்ள 86 ஆயிரம் தனியார் வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் மாணவ–மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தில் பள்ளி–கல்லூரிகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.