பிரசவத்திற்கு வந்த போது டாக்டர்களால் திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்து போனது. இது தொடர்பாக டாக்டர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்
மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்தவர் ஜாவேத். இவரது மனைவி ஹாதிஉல்நிஷா (வயது22). கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று ஹாதிஉல்நிஷாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பிரசவ வலியாக இருக்கலாம் என கருதிய ஜாவேத் மனைவியை அருகில் உள்ள பாபா மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதல் கர்ப்ப காலத்தில் அவ்வப்போது இப்படி தான் வலி ஏற்படும். இது பிரசவ வலி இல்லை என்று கூறி வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மீண்டும் ஹாதிஉல்நிஷாவுக்கு கடும் வயிற்று வலி உண்டானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாவேத் மீண்டும் மனைவியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
குழந்தை இறந்தது
ஆஸ்பத்திரி வளாகத்திற்கு ஆட்டோ நுழைந்த போது ஹாதிஉல்நிஷாவுக்கு பிரசவமானது. ஆனால் துரதிருஷ்டவசமாக குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து போனது.
இதனால் கணவன், மனைவி இருவரும் மிகுந்த வேதனை அடைந்து அழுதனர். தனது மனைவிக்கு பரிசோதனை செய்த டாக்டர்களின் அலட்சியத்தால் தான் தனது குழந்தை இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி அதிகாரிகளை சந்தித்து ஜாவேத் முறையிட்டார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட டாக்டர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் பிரதீப் ஜாதவ் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.