Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2016

மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் கைது புனேயில் பரபரப்பு சம்பவம்


புனேயில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த ஐ.டி. நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மகப்பேறு மருத்துவர்
புனே ஹிஞ்சவாடி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 38). ஐ.டி. நிறுவன ஊழியர். இவரது மனைவி அஞ்சலி (34). மகப்பேறு மருத்துவரான இவர், சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், அஞ்சலி மீது மனோஜ் வெறுப்பில் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அஞ்சலி தன்னுடைய கிளினிக்கில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த கணவர் மனோஜ் மீண்டும் அவருடன் சண்டை போட்டார். அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரம் அடைந்த மனோஜ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அஞ்சலியின் நெற்றியில் சுட்டார்.

கைது
இதைத்தொடர்ந்து, அவரது நெற்றியை துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால், அவர் சரிந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போனார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கண் முன்பு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம், அனைவரையும் பதை பதைப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து, மனோஜ் தன்னுடைய சொந்த ஊரான மத்திய பிரதேசத்துக்கு தப்பியோட முயற்சி செய்தார்.

உடனடியாக போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய அந்த நாட்டு துப்பாக்கியை ஒரு வாரத்துக்கு முன்பு தான் ஒருவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கியதாக மனோஜ் தெரிவித்தார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

2 மனைவிகள் சாவு
மனோஜை பொறுத்தவரை அஞ்சலி அவருக்கு 3–வது மனைவி ஆவார். ஏற்கனவே 2 பெண்களை மணம் முடித்த மனோஜ், அவர்களது இறப்புக்கு பின்னர் அஞ்சலியை 3–வதாக கரம்பிடித்திருக்கிறார். அதேசமயம், மனோஜின் 2 மனைவிகளும் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர். அதையும், அவர்கள் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி போலீசாரை மனோஜ் நம்ப வைத்திருக்கிறார்.

மனைவியை கொலை செய்ய அவருக்கு துப்பாக்கி விற்பனை செய்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.