கணவன் தலைமறைவானதால் ஆத்திரம் அடைந்த பெண் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. அப்போது, அங்கு வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த மண்எண்ணையை திடீரென உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணின் கையில் இருந்த மண்எண்னை கேனை பிடுங்கியதுடன் அவரையும் வெளியே அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தீக்குளிக்க முயன்ற பெண் சிவகங்கை அருகே உள்ள திருப்பாச்சேத்தி ஆவரங்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் அஞ்சலை தேவி (30) என்பது தெரியவந்தது.
தலைமறைவான கணவர்
இது குறித்து அஞ்சலைதேவி கூறியதாவது:–
எனக்கும், மதுரை மாவட்டம் கத்தப்பட்டியை சேர்ந்த செந்தில்பாண்டிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு திருமணத்தின் போது சீர்வரிசையாக 15 பவுன் நகையை எனது பெற்றோர்கள் கொடுத்தனர். ஆனால் அந்த நகை முழுவதையும் எனது கணவர் விற்றுவிட்டார்.
அத்துடன், எனது பெற்றோரிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கி வந்தால் மட்டுமே தன்னுடன் குடும்பம் நடத்த முடியும் என்று தெரிவித்து விட்டார். இதனால் கணவர் வீட்டார் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். அதனை தொடர்ந்து எனது பெற்றோர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் வாங்கிகொடுத்தேன்.
இந்தநிலையில், சொந்த வீடு வாங்க போவதாகவும், அதற்காக வெளியூர் செல்ல இருப்பதாகவும் கூறி எனது பெற்றோர் வீட்டில் என்னை எனது கணவர் விட்டுச்சென்றார். ஆனால் நீண்டநாட்களாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. எனது கணவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டிக்கிடந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்த போது எனது கணவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்ய முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.