சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த கணவன்-மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தம்பதி பெயர் சித்தார்த்த வேலு (வயது 48), பிரிசில்லா மார்க்கரேட்(45). இவர்கள் இருவரும் இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும்போது பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் ஆபாசபடங்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்தனர்.
அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி விட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களை, இணையதளங்களில் வெளியிட்டதாக இவர்கள் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
சித்தார்த்த வேலு வசித்த வீட்டில் சோதனை நடத்தி, ஆபாச படங்கள் உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தீவிர விசாரணைக்குப்பிறகு சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட ஆபாச இணையதளங்களை முடக்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். சித்தார்த்த வேலு, பட்ட மேற்படிப்பு மற்றும் பி.எச்.டி படித்தவர். அவரது ஒரே மகன் சிங்கப்பூரில் படிக்கிறார்.
சித்தார்த்த வேலு பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கி கணக்கில் ரூ.2.4 கோடி பணம் வைப்புத்தொகையாக உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த வங்கி கணக்கை முடக்கி அந்த பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.