ஜெர்மனியில் ஓடும் ரெயிலுக்குள் பயணிகள் மீது கோடரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் ஓடும் மின்சார ரெயில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 9.15 மணியளவில் உவர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஓச்ஸென்பர்ட் நிலையத்தை அந்த ரெயில் நெருங்கியபோது உள்ளே இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரெயில் நின்றதும் கீழே இறங்கி செல்ல முயன்றவனை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபன் ஓச்ஸென்பர்ட் நகரில் வாழ்ந்து வந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.