புதுடெல்லி,
ரெயில் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிற அல்லது உறுப்புகளை இழக்கிற பயணிகளுக்கு ரெயில்வே துறை இழப்பீடு வழங்கி வருகிறது.
ஒரு காசு கட்டணம்
இந்த நிலையில் ரெயில் பயணிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி ரெயிலில் தினமும் பயணிக்கிற (சீசன் டிக்கெட்டில்) பயணிகளுக்கு தினமும் ஒரு காசு கட்டணத்தில் (பிரிமியம்) ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்படும்.
இதேபோன்று ரெயிலில் முன் பதிவு செய்து பயணிக்கிறவர்களுக்கு ரூ.5 கட்டணத்தில் இந்த காப்பீடு செய்யப்படும்.
ரெயில் விபத்துகளில் பலியாகிறவர்களுக்கு அல்லது நிரந்தர ஊனம் அடைகிறவர்களுக்கு இழப்பீடாக காப்பீடு வகையில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
ஊனம்
பகுதியளவில் உடல் ஊனம் அடைகிறவர்களுக்கு ரூ.7½ லட்சம் இழப்பீடு தரப்படும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.
உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.10 ஆயிரம் தரப்படும்.
இந்த காப்பீட்டு திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரெயில்வே அமல்படுத்தும். இதற்கான நடவடிக்கையை ரெயில்வே முடுக்கி விட்டுள்ளது.
3 நிறுவனங்கள்
இது தொடர்பாக 17 காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்து பரிசீலனை நடைபெற்றது. முடிவில் ராயல் சுந்தரம், ஐ.சி.ஐ.சி.ஐ. லாம்பர்டு ஜெனரல் இன்சூரன்சு, ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்சு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ரெயில் பயணிகளுக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.
முதலில் இந்த திட்டம், முன்பதிவு செய்து ரெயிலில் பயணம்செய்கிறவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் சோதனை ரீதியில் அமல்படுத்தப்படும் என ரெயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தினமும் ரெயிலில் பயணம் செய்கிறவர்களுக்கான காப்பீட்டு திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.