விபத்தில் அடிபட்டு படுத்த படுக்கையாக இருக்கும் என்ஜினீயருக்கு ரூ.1.24 கோடியை தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. இதற்கான காசோலையை பாதிக்கப்பட்டவருக்கு, ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நேற்று வழங்கினார்.
விபத்தில் படுகாயம்
சென்னையை சேர்ந்தவர் ஆர்.உமாபதி (வயது 40). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளை, அந்த நண்பர் வேகமாக ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்தார். வண்டி தடுப்பு சுவரில் மோதியதில், இருவரும் கீழே விழுந்தனர். இதில், உமாபதியின் முதுகு தண்டுவட எலும்பு முறிந்தது. உடலிலும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
தற்போது அவர் படுத்த படுக்கையாக உள்ளார். இந்த நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு உமாபதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ரூ.1.24 கோடி இழப்பீடு
இந்த வழக்கை 5-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு நடத்திய ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.1 கோடியே 24 லட்சத்தை இழப்பீடாக உமாபதிக்கு வழங்க ஒப்பு கொண்டது. இதையடுத்து, நேற்று மாலையில் உமாபதி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி வழங்கினார்
அவரிடம் தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்கிய ரூ.1.24 கோடிக்கான காசோலையை, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் வழங்கினார். அப்போது, ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.ராஜேந்திரன், டி.கிருஷ்ணகுமார், சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.