கார் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். போதையில் காரை ஓட்டி வந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கூலி தொழிலாளி
சென்னை திருவான்மியூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கூலி தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தனது நண்பர் சரவணனுடன் வேலைக்கு சென்றார்.
தரமணி ராஜீவ்காந்தி சாலையை கடந்து செல்வதற்காக சாலையோரம் முனுசாமி நின்று கொண்டிருந்தார். அவரது நண்பர் சரவணன் முதலில் சாலையை கடந்து சென்று விட்டார்.
கார் மோதி பலி
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முனுசாமி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. சினிமாவில் வருவது போல் தூக்கி வீசப்பட்ட முனுசாமி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார்.
போதையில் பெண்கள்
சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று பெருங்குடி அருகே அந்த காரை மடக்கிப்பிடித்தார். அப்போது காரில் 3 பெண்கள் மதுபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்த 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
பெண் என்ஜினீயர் கைது
அதில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் மகளான ஐஸ்வர்யா (26) என்பவர் தனது தோழிகளுடன் வார விடுமுறையை கொண்டாட தனது சொகுசு காரில் சென்றதாக கூறப்படுகிறது.
இவர்கள் 3 பேரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யாவை கைது செய்தனர்.
15–ந்தேதி வரை காவல்
பலியான முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான ஐஸ்வர்யாவை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 15–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.