தானே மாவட்டம் பிவண்டியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றில் சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் நுழைந்தார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் பிவண்டி பகுதியை சேர்ந்த சித்தார்த் ஜக்தாப்(வயது31) என்பதும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சம்பளம் கிடைக்காத விரக்தியில், குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சம்பளம் கிடைக்காத விரக்தியில், குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.