Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

வாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் டெல்லியில் கைது


வாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த 31 வயதாகும் முகம்மது காலித் கடை வைத்துள்ளார். இவர் மூன்று பிரீபெய்ட் சிம் கார்டுகளை கொண்டு மனதில் தோன்றும் எண்களுக்கு போன் செய்து, பெண்கள் பேசினால் அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான மெசேஜ்களை அனுப்புவதை வாடிக்கையாக செய்துவந்துள்ளார்.

இவ்வாறு சுமார் 1500 பெண்களுக்கு வெவ்வேறு மொபைல்கள் மற்றும் நம்பர்களில் இருந்து ஆபாசமான மெசேஜ்களையும், புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எண்ணற்ற புகார்களை வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது, குற்றச்செயலில் ஈடுபட்டவரின் பெயர் காலித் என்பது தெரியவந்தது. அவரது மொபைலில் 2100 பெண்களின் மொபைல் எண்கள் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, ஒரு ‘கிக்’கிற்காக இப்படி செய்ததாகவும், அதுவும் அழகான பெண்களுக்கு மட்டுமே மெசேஜ்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.