வீட்டில் படுத்து தூங்கிய பள்ளி ஆசிரியைக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியை
பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 4 மகள்கள். மூத்த மகள் பூமணி (வயது 25). இவர், வெங்கல் அருகே கசுவா கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
முன்விரோதம்
பூமணியின் தங்கை ஜெகதீஸ்வரியை அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினார். இதுபற்றி பூமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், கடந்த வாரம் முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் முரளியின் மனைவி கவிதா, தினமும் ஆசிரியை பூமணியை பார்த்து, ‘‘உங்கள் குடும்பத்தை பழி தீர்க்காமல் விடமாட்டேன்’’ என்று மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
சரமாரி வெட்டு
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் 5 பேர், நாராயணன் வீட்டு கதவை நெம்பி திறந்து உள்ளே புகுந்தனர். வீட்டின் உள்ளே தனது தந்தை மற்றும் சகோதரிகளுடன் பூமணி தூங்கிக்கொண்டு இருந்தார்.
மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூமணியை சரமாரியாக வெட்டினர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நாராயணன், அவர்களை தடுக்க முயன்றார். மர்மநபர்கள் அவரை கீழே தள்ளினர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் பூமணிக்கு வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடி வந்தனர். இதனால் பயந்து போன மர்மநபர்கள் அங்கிருந்து இருட்டில் தப்பி ஓடிவிட்டனர்.
உடனடியாக பூமணியை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை பூமணியை முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.