Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

குளிர்சாதனங்கள் இல்லாமல் குளிர்வசதி சாத்தியம்


இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளில் கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. கட்டிடங்களில் குளிர்வசதி செய்வதற்காக ஏர்–கண்டிஷன் சாதனங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது. அதனால் மின்சக்தி பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

கட்டுமானப் பொருட்களின் அதிகப்படியான வெப்பம் கடத்துகிற தன்மையே கட்டிடங்களில் குளிர்வசதி செய்யாமல் சமாளிக்க முடியாது என்ற நிலை உருவானதற்கு முக்கிய காரணம். வெப்பத்தைக் கடத்தாத அல்லது குறைவாக வெப்பத்தை கடத்துகிற தன்மை கொண்ட கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தினால், வீட்டிற்குள் எப்போதும் குளிர்ச்சியான தட்பவெப்பம் நிலவும்.

பெங்களூருவில் உள்ள ‘இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்சஸ்’ நிறுவனத்தின் நிலையான தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர்கள் குறைவாக வெப்பம் கடத்தும் ‘சிமெண்டு ஸ்டபிளைஸைடு சாயில் பிளாக்ஸ்’ என்ற மாற்று கட்டுமானப் பொருளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கற்களைப் பயன்படுத்தி மாதிரி கட்டிடத்தையும் உருவாக்கி தங்களது ஆய்வு முடிவுகளை நிரூபித்திருக்கிறார்கள்.

பொதுவாக மிதவெப்ப நாடுகளில் கட்டுமானப் பணிகளுக்கு கான்கிரீட் மற்றும் சுட்ட செங்கற்கள்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாற்றாக ‘சிமெண்டு ஸ்டபிளைஸைடு சாயில் பிளாக்ஸ்’ என்ற மாற்று கட்டுமானப் பொருளை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த கற்களானது சிமெண்டு, மண் மற்றும் மணல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

வழக்கமான கான்கிரீட், சுட்ட செங்கற்கள் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இந்த புதிய கட்டுமானப் பொருளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டிடத்தில் வெப்பத்தை கடத்தும் தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த ‘சி.எஸ்.எஸ்.பி’ என்ற மாற்று கட்டுமானப் பொருளில் 10.5 முதல் 16 சதவீதம் வரை களிமண், கன சென்டிமீட்டருக்கு 1.7 முதல் 1.8 கிராம் வரை அடர்த்தி, 5 முதல் 12 சதவீதம் வரை சிமெண்டு ஆகியவற்றைக் கலக்கலாம் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகளானது மூன்று விதமான களிமண் கலவைகள், நான்கு விதமான சிமெண்டு கலவைகள் மற்றும் உலர்ந்த நிலையில் கலவைப் பொருட்களின் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாற்று கட்டுமான பொருளான இந்த ‘சிமெண்ட் ஸ்டபிளைஸைடு சாயில் பிளாக்கு’களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டிடங்களில் குளிர்வசதி செய்ய வேண்டிய தேவைகள் இல்லை. எனவே மின்சார செலவில் சரிபாதியை குறைக்க முடியும் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.