Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

காஷ்மீர் என்பது ரியல் எஸ்ட்டேட் (நிலப்) பிரச்னை அல்ல; அங்குள்ள மக்கள் பிரச்னை - ப.சிதம்பரம்


முன்னாள் உள்துறை அமைசர் ப.சிதம்பரம் கடந்த வாரம் காஷ்மீர் குறித்து NDTV-க்கு ஒரு நேர்காணல் அளித்தார். அது ஒரு சிறப்பான நேர்காணல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 2010-ல் நடந்த கலவரத்தில், அரசின் தவறுகளை மனமுவந்து ஒப்புக் கொண்டுள்ளார்.

அவரது நேர்காணலின் சில முக்கிய அம்சங்கள் மட்டும் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது:

* காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நிலப்பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீர் என்பது ரியல் எஸ்ட்டேட் (நிலப்) பிரச்னை அல்ல; அங்குள்ள வாழக்கூடிய காஷ்மீர் மக்களுடைய பிரச்னை.

* எந்த வாக்குறுதியின் கீழ், காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ, அந்த வாக்குறுதியை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முன் உள்ள சிறந்த வழி, காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது தந்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவது தான் அல்லது அவர்களுக்கு சுயாட்சி வழங்குவது தான். இதன் மூலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், நாடு அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்.

* இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று நாம் (இந்தியா) அறிவுறுத்துகிறோம். இதையே, காஷ்மீர் விவகாரத்தில் நாமும் செய்ய வேண்டும்.

* BJP - PDP கூட்டணி ஆட்சி, காஷ்மீர் மக்களை மிரட்டுகிறது, பயமுறுத்துகிறது, தீவிர ஆத்திரமூட்டுகிறது.

* 2010 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பாடம் பெற்றுக்கொண்டு பல்வேறு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக அடுத்த 4-5 ஆண்டுகள் காஷ்மீரில் அமைதி நிலவியது.

* வரையறுக்கப்பட்ட அளவை விட ஹெவியான பெல்லட் குண்டுகளை, இன்று ராணுவம் பயன்படுத்துகிறது.

* பிரச்னைகளின் போது முதல் அடுக்கில் காஷ்மீர் காவல்துறையும், CRPF மற்றும் இதர துணை இராணுவப் படையின் இரண்டாம் அடுக்கிலும் இருக்க வேண்டும் எனவும், மிகச்சில காவல்துறையினர் மட்டுமே பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்றும், சுட நேர்ந்தால் காலுக்கு கீழ் மட்டுமே எனவும் நின்று கொண்டு சூடக்கூடாது (உட்கார்ந்து கொண்டு மட்டுமே சுட வேண்டும்) எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இப்போது இந்த உத்தரவுகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை.

* போராளிகள், கிளர்ச்சியாளர்கள் மீதே கடினமான நடவடிக்கைகள் (hard policing) வேண்டுமே தவிர, பொதுமக்கள் மீதல்ல. பொதுமக்களிடம் கற்கள் மட்டுமே உள்ளன. எந்த ஆயுதமும் அவர்களிடம் இல்லை. இந்த பொதுமக்கள் மீது விவேகமுடைய (wise policing), இலேசான (soft policing) நடவடிக்கைகள் தான் எடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.