சென்னை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ஓடிய 29 சிறுவர்கள் போலீசில் சிக்கினர். தப்பிக்க முடியாததால் 4 சிறுவர்கள் உடலை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவர் சீர்த்திருத்த பள்ளி
சென்னை கெல்லீசில் அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளி செயல்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு 74 சிறுவர்கள் தங்கி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து 33 சிறுவர்கள் தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளனர். ஆனால் அவர்களை தப்பிச்செல்ல கூடாது என்று 10 சிறுவர்கள் தடுத்து கண்டித்தனர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வார்டன் உதயகுமார் சிறுவர்களை சமாதானம் செய்துவைத்தார்.
கூவம் ஆற்றில் பதுங்கல்
இந்தநிலையில் சிறுவர்கள் நேற்று மதியம் மீண்டும் தப்பிச்செல்லும் முயற்சியில் இறங்கினர். அப்போது தடுக்க வந்த சிறுவர்களை தாக்கிவிட்டும், வார்டனை கீழே தள்ளிவிட்டும் சுவர் ஏறி தப்பினர்.
இதுகுறித்து வார்டன் தலைமை செயலக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
அப்போது தப்பிய சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியின் பின்புறம் வழியாக ஓடும் கூவம் ஆற்றின் கரையோரம் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்கள் வெளியேற முடியாத வகையில் போலீசார் அரண் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் வெளியே தப்பி செல்ல முடியாமல் சிறுவர்கள் தவித்தனர். பின்னர் பதுங்கி இருந்த 25 சிறுவர்கள் போலீசார் பிடியில் சிக்கினர்.
4 சிறுவர்கள் தற்கொலை முயற்சி
போலீசார் சுற்றி வளைத்ததால் 4 சிறுவர்கள் மதியம் 2 மணியளவில் மீண்டும் சீர்த்திருத்த பள்ளியை நோக்கி வந்தனர். திடீரென்று பிளேடை காட்டி எங்களை வெளியே விடுங்கள் என்று போலீசாருக்கும், படம் பிடித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர்.
போலீசார் அவர்களை பிடிக்க நெருங்கிய போது, 4 சிறுவர்களும் தங்கள் மேல் சட்டையை கழற்றி வீசி எறிந்தனர். பின்னர் பிளேடால் தங்கள் உடலை கீறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சிறுவர்களை பார்ப்பதற்காக வந்திருந்த பெற்றோர் அந்த காட்சியை பார்த்து கதறினர். அவர்களிடம் இருந்து பிளேடை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். இந்தநிலையில் போலீசார், அந்த சிறுவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பிளேடை பறிமுதல் செய்தனர்.
உடலில் ரத்த காயங்களுடன் இருந்த சிறுவர்களை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேன் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
உயர் அதிகாரிகள் ஆலோசனை
தப்பியோடிய 33 சிறுவர்களில் 25 சிறுவர்களை போலீசார் நேற்று பகலில் பிடித்துவிட்டனர். 4 சிறுவர்கள் தானாக வந்து சிக்கி கொண்டனர். தலைமறைவாக உள்ள 4 சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து தகவலறிந்து சென்னை போலீஸ் இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர்கள் பிரவேஷ் குமார், பாலகிருஷ்ணன், மாஜிஸ்திரேட்டு லட்சுமி ரமேஷ் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து சிறுவர்கள் சுவர் ஏறி தப்பி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் சுவரின் உயரத்தை அதிகரிப்பது குறித்தும், பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்தனர்.
குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அடிக்கடி சிறுவர்கள் தப்பி சென்று வருகின்றனர். எனவே கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.