Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட நீதிபதி


கனடா நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் கீழ்த்தரமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஒருவரின் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் உள்ள அல்பேர்ட்டா மாகாணத்தில் ரோபின் கேம்ப் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டில் 19 வயது இளம்பெண் ஒருவரை ஸ்கொட் வால்டர் என்பவர் பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார்.

இந்த கற்பழிப்பு தொடர்பான வழக்கு நீதிபதியான ரோபின் கேம்ப் முன்னிலையில் வந்துள்ளது.

நீதிபதி விசாரணையின்போது கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் ‘நபர் உங்களை கற்பழிக்க முயன்றபோது நீங்கள் ஏன் அதை அனுமதித்தீர்கள்? உங்கள் இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து தப்பியிருக்கலாமே?

இந்த சம்பவத்தில் நபரை அனுமதித்த நீங்கள் தான் குற்றவாளி’’ என பகிரங்கமாக பேசிய நீதிபதி கற்பழித்த ஸ்கொட் வால்டரை நிரபராதி எனக் கூறி விடுதலையும் செய்துள்ளார்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் கீழ்த்தரமாக பேசிய நீதிபதி மீது பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அல்பேர்ட்டா மேல்முறையீட்டுக்கான நீதிமன்றம் கடந்தாண்டு ரோபர்ட் கேம்பின் தீர்ப்பை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் நீதிபதிகள் கவுன்சில் முன்னிலையில் ரோபின் கேம்ப் மீது விசாரணை நடைபெற்றுள்ளது.அப்போது, ‘’நான் பெரும் தவறு செய்து விட்டேன். இதற்காக அந்த இளம்பெண்ணிடமும் பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல் சிறந்த நீதிபதியாக செயல்படுவேன். சட்டத்தை பற்றியும் பாலியல் புகார்களை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதையும் நான் நன்றாக கற்றுக்கொள்கிறேன்’’ என கவுன்சில் முன்னிலையில் ரோபன் கேம்ப் பேசியுள்ளார். ஆனால், ரோபின் கேம்ப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரை தற்காலிகமாக பணியிலிருந்து கவுன்சில் நீக்கியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.