Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

கேரளாவில் பதுங்கி இருந்த பொடோ தீவிரவாதி கைது: தனிப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை


கேரளாவில் பதுங்கி இருந்த பொடோ தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவனை கேரள தனிப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் பொடோ தீவிரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டுவிட்டு வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று தலைமறைவாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதுபோல தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளை அசாம் போலீசார் வேட்டையாடி வருகிறார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலம் சோனாபூரைச் சேர்ந்த பொடோ தீவிரவாத இயக்க தலைவர்களில் ஒருவரான கோர்மேசர் (வயது 28) என்பவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் தலைமறைவாக இருப்பதாக அசாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அவர்கள் கேரள போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அசாமில் 2 பொடோ தீவிரவாதிகள் போலீஸ் பிடியில் சிக்கினார்கள்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவரும் கோர்மேசரின் கூட்டாளிகள் என்பதும், கேரளாவில் தலைமறைவாக இருந்த அவர்கள் 2 பேரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கோர்மேசர், பாலக்காட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி பாலக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரகசிய விசாரணை நடத்தி, தீவிரவாதி கோர்மேசரை கைது செய்தனர்.

அவர், பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி போல வேலை செய்து வந்தார். தனது பெயரை மாற்றி தர்மே‌ஷர் என்றும் பதிவு செய்திருந்தார்.

கடந்த 6 மாதமாக அவர் இங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தி உள்ளார். கைது செய்யப்பட்ட கோர்மேசரை கேரள தனிப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர் கேரளாவில் நாசவேலை ஏதும் செய்ய திட்டமிட்டாரா? அவருடன் வேறு தீவிரவாதிகள் யாரும் கேரளாவில் ஊடுருவி உள்ளார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.