Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

தாலியை அடகு வைத்து கழிவறை கட்டிய பெண்


பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன் வீட்டில் கழிப்பறை கட்டுவதற்காக தாலியை அடகு வைத்த சம்பவம் அதிகாரிகளை வியக்க வைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். இதில், வீட்டுக்கு வீடு கழிவறை கட்டுவதன் அவசியம் வழியுறுத்தப்பட்டு வருகிறது. கழிவறை கட்டுவதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாகவும் வழங்கி வருகிறது. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு பல இடங்களில் கழிவறைகள் கட்டி வருகின்றனர்.

பீகார் மாநிலம் ரோக்த் மாவட்டத்தில் உள்ள பராக்கானா என்ற கிராமத்தை சேர்ந்தவர் போல்குமாரி. இவர், பள்ளி ஒன்றில் சமையல் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கூலி தொழிலாளி.

போல் குமாரி வீட்டில் கழிவறை கட்ட விரும்பினார். ஆனால், போதிய பணம் இல்லை. இதனால் தனது தாலி நகையை அடகு வைத்து பணம் திரட்டினார். அதை வைத்து கழிவறையை கட்டி முடித்து உள்ளார். அவருடைய இந்த செயலுக்கு அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் கழிவறையை கட்டி முடித்தார்.

அவருடைய செயலை பாராட்டி அரசு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.

கழிவறை திட்ட பணிகளுக்கு அவரை தூதராக நியமித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.