Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

’பீஸ்’ டிவிக்கு தடை விதித்ததை தொடர்ந்து ’பீஸ் பள்ளிகள்’ தொடர்பாக வங்காளதேசம் விசாரிக்கிறது



’பீஸ்’ டிவிக்கு தடை விதித்ததை தொடர்ந்து ’பீஸ் பள்ளிகள்’ தொடர்பாக வங்காளதேசம் விசாரணையை தொடங்கியது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் டிவிக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து ’பீஸ்’ என்ற பெயருடன் தொடங்கும் பள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று அந்நாட்டு அரசு விசாரணையை தொடங்கி உள்ளது.

’பீஸ்’ என்ற பெயருடன் எத்தனை பள்ளிகள் செயல்படுகிறது என்பது தொடர்பாக வங்காளதேசம் அரசிடம் பிரத்யேக தரவு இல்லாத நிலையில், அதிகாரிகள் வங்காளதேசத்தில் 28 பள்ளிகள் ’பீஸ்’ என்ற பெயருடன் செயல்படுகிறது என்று கூறிஉள்ளனர். தலைநகர் டாக்கா மற்றும் பிற பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் ’பீஸ்’ என்ற பெயரை இணைத்து சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் கொள்கையுடன் இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என பிடிநியூஸ்24 டாட் காம் செய்தி வெளியிட்டு உள்ளது. இப்போது அரசு ’பீஸ்’ என்ற பெயரில் செயல்படும் பள்ளிகள் தொடர்பாக விசாரிக்கிறது.

வங்காளதேச அரசு 20 பீஸ் டிவிகள் குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

“இந்த பள்ளிகள் ஜாகிர் நாயக்கின் கொள்கைகளை பின்பற்றி இருந்தால், நடவடிக்கைகளை சந்திக்கும்,” என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

டாக்கா பள்ளி கல்வி வாரிய அதிகாரிகள் பேசுகையில், லால்மாதியாவில் மட்டும் பீஸ் என்ற பெயருடன் செயல்பட ஆங்கில வழி பள்ளிக்கூடத்திற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டது என்று கூறிஉள்ளனர். மற்றவை எதுவும் இதுபோன்ற அனுமதியை பெறவில்லை என்று செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “இதுபோன்ற பள்ளிகள் தொடர்பாக விசாரித்து வருகிறோம்,” என்று வங்காளதேச கல்வித்துறை மந்திரி நுருல் இஸ்லாம் நாகித் கூறிஉள்ளார். இதுபோன்ற பள்ளிகளின் தன்மையை கல்வி வாரியம் பரிசோதனை செய்யும் என்று டாக்கா பள்ளி கல்வி வாரிய அதிகாரி ரகுமான் கூறிஉள்ளார். டாக்காவில் இதுபோன்ற பீஸ் என்ற பெயரில் செயல்படும் பள்ளிகள் தரப்பில் அனுமதி எதுவும் கோரப்படவில்லை என்று கல்வித்துறை வாரிய அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்கின் மதபோதனைகள் துபாயை தலைமையிடமாக கொண்ட பீஸ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.

சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் மதபோதனையை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தனர். இதனால் அவர்கள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திய வங்காளதேசம் ’பீஸ் டிவி’ ஒளிபரப்பை ரத்து செய்துவிட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.